About Me

My photo
Five faces of shivam are Easanam,Thathpurusam, Agoram, Vamadheyam, Sathyojatham. Meikanda Shasthram says three types of worship. *Arupa {Niskala} - formless[empty]. *Rupa {Sakala} - means forms of worship,fully manifested[Natarajar]. *Rupa Arupa {Niskalasakala} -formless form[Sivalingam]. Sarvam Shiva Mayam

Thursday, May 21, 2009

Vaipu ThiruThalangal

muvar thevara vaipputh thalangaL

ThEvAra vaipputh thalangaL
S.No. Thalam Refering Song Location
1. அகத்தீச்சுரம் - agaththIccuram அ 6-71-8

கன்னியாகுமரியிலிருந்து ஐந்து கி. மீட்டர் தொலைவில் அகத்தீச்சுரம் உள்ளது. அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் இருப்பதாக தெரிகிறது.

2. அக்கீச்சரம் - akkIcharam அ 6-71-8

தஞ்சை மாவட்டம் - ஆழ்வார்குறிச்சி புகை வண்டி நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் அக்கீச்சரம் உள்ளது.

3. அணிஅண்ணாமலை - aNiaNNAmalai அ 4-63-1 & 4

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அணிஅண்ணாமலை கோயில் உள்ளது. தற்போது "அடிஅண்ணாமலை" என்று வழங் குகிறது.

4. அண்ணல்வாயில் - aNNalvAyil அ 6-71-7

அண்ணல்வாயில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு செல்லும் வழியில் உள்ளது. தற்போது 'அன்னவாசல்' என்று வழங்குகிறது.

5. அத்தங்குடி - athangudi ச 2-39-10 -
6. அத்தமயனமலை - athamayanamalai அ 6-71-9

ஞாயிறு மறையும் மலை; இஃது ஒரு தலமாகக் குறிக்கப்பட்டது

7. அத்தி - athi ச 2-39-2

செயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தி அகத்தீசுவர முடையார் கோயில் கேரளாந்தகநல்லூர்

8. அத்தீச்சுரம் - athIccuram அ 6-71-8

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி புகைவண்டி நிலையத்திலிருந்து 3 மைல் தொலைவில் அத்தீச்சுரம் உள்ளது. தற்போது சிவசைலம் என்று வழங்குகிறது.

9. அமுதனூர் - amudhanUr சு 7-12-1 -
10. அயனீச்சுரம் - ayanIccuram அ 6-71-6

1. அம்பாசமுத்திரத்திற்கு அருகில் மூன்று மைல் தொலைவில் தற்போதுள்ள பிரமதேசமே அயனீச்சுரம் என்பர்.

2. திருப்பனந்தாளில் அசனீச்சுரம் என் றொரு கோயிலுண்டு.

3. வட ஆற்காடு மாவட்டம் வழுவூரிலுள்ள பழைய கோயில் அயனீச்சுரம் எனக் கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது.

11. அரணநல்லூர் - araNan^allUr அ 6-7-7 -
12. அரிச்சந்திரம் - ariccan^dhiram அ 6-51-10

இத்தலம் பட்டீச்சுரத்திற்கு வட திசையில் உள்ளது; இக்கோயிலுக்கு எதிரில் சற்றுத் தொலைவில் உள்ள குளமே பாற்குளம் எனப்படுகிறது.

13. அளப்பூர் - aLappUr அ 6-51-3, 6-70-4, 6-71-4; சு 7-47-4

திருக்கடையூருக்கு அருகில் அளப்பூர் உள்ளது. தற்போது தரங்கம்பாடி என்று வழங்கிறது.

14. அவல்பூந்துறை - avalpUndurai அ 6-71-11

ஈரோட்டிலிருந்து - அறச்சலூர் வழியாகச் செல்லும் தாராபுரம் / பழனி சாலையில் பூந்துறை உள்ளது

15. அறப்பள்ளி - aRappaLLi ச 2-39-4; அ 5-34-1, 6-70-1 & 6-71-1

"அறைப்பள்ளி" நாமக்கல்லிலுருந்து 52 கி. மீ. தொலைவில், மலைமேல் உள்ளது. தற்போது கொல்லிமலை என்று வழங்குகிறது.

16. அன்னியூர் - anniyUr

அவிநாசியிலிருந்து 19 கி. மீ. தொலைவில் அன்னியூர் உள்ளது. தற்போது இவ்வூர் அன்னூர் என்று வழங்குகிறது.

17. ஆடகேச்சுரம் - ATakEccuram அ 6-71-8

திருவாரூர்த் திருக்கோலுக்குள் "நாகபிலம்" என வழங்கும் ஆலயம்

18. ஆழியூர் - AziyUr அ 6-70-7; சு 7-12-7

கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையில் ஆழியூர் உள்ளது

19. ஆறை - ARai ச 2-39-5

ஆற்றூர் என்பதன் மரூஉ.

20. ஆறைமேற்றளி - ARaimERRaLi - (பழையாறை - pazhaiyARai) சு 7-35-1

சுவாமி மலை புகை வண்டி நிலையத்தி லிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. தற்போது திருமேற்றளி என்ற பெயரில் விளங்குகிறது.

21. ஆன்பட்டி / பேரூர் - Anpatti / pErUr ச 2-39-1; அ 6-7-10, 6-51-8, 6-70-2; சு 7-47-4, 7-90-10

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ளது. 'குடகத் தில்லை யம்பவம்' (7-) என்பதும் இதுவே. கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள திருப் பேரூர் கோயில் கல்வெட்டொன்று இவ் வூரை 'திருவான்படி' என்று குறிப்பிடுவதாக தெரிகிறது. இத்தலம் 'காஞ்சிவாய்ப்பேரூர்' என்று வழங்கியதாகவும் தெரிகிறது.

22. இடவை - iDavai அ 6-70-3

இராசேந்திர சிங்கவள நாட்டு மண்ணி நாட்டு இடவை எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

23. இடைக்குளம் - iDaikkuLam அ 6-71-10

ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இடைக்குளம் உள்ளது. தற்போது மருத்துவக்குடி என வழங்குகிறது.

24. இடைத்தானம் - iDaithAnam அ 6-7-8 -
25. இடைப்பள்ளி - iDaippaLLi ச 2-39-4 -
26. இராப்பட்டீச்சரம் - irAppaTTIccuram அ 6-25-10

கும்பகோணம் திருவாரூர்ப் பெருவழியில் பெருவேளூர்க்குத் தெற்கே இராப்பட்டீச் சரம் அமைந்துள்ளது.

27. இளங்கோயில் - ilangkOil அ 6-71-5

பழைய திருக்கோயிலைப் புதுப்பிக்குந் திருப்பணியினைத் தொடங்குமுன், நாள் வழிபாடு தடையின்றி நிகழ்தற் பொருட் டுக் கருவறையிலுள்ள பெருமானை வேறோர் இடத்தில் எழுந்தருளியிருக்கும் படி வேண்டியமைத்துக் கொண்ட கோயில் இளங்கோயில் எனப்படும்.

இடைக்கால வழிபாட்டிற்கென அமைத்துக் கொள்ளப் பெற்ற இச்சிறிய கோயிலைப் பாலாலயம் என வழங்குவர்.

இவ்வாறு இளங்கோயிலாக அமைக்கப் பட்ட சந்நிதிகள் தேவார ஆசிரியர்களாற் பாடப்பெற்றமையால் நிலையான தனிக் கோயில்களாகவே இன்றும் காட்சியளிக் கின்றன. மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் என்பன இவ்வகையிற் குறிக்கத்தக்கன.

28. இளமர் - ilamar அ 6-70-4 -
29. இறைக்காடு - iRaikkAdu சு 7-47-3

'இறைக்காட்டாயே எங்கட்குன்னை' எனப் பாடங்கொண்டு, பெருமானே எங்களுக்கு உன் திருமேனியழகினைச் சிறிதேனும் புலப்படுத்தாய் எனப் பொருள்கொள்ளு மிடத்து, 'இறைக்காடு' என ஒரு தனித்தலம் கொள்ள வேண்டியதில்லை.

30. இரும்புதல் - irumpudhal அ 6-51-6

இது ஆவூர்க் கூற்றத்தைச் சார்ந்தது. பாபநாசந் தாலூகாவில் உள்ள 'இரும்புதல்' என்னும் ஊராகும்.

31. இறையான்சேரி - iRaiyAncEri அ 6-70-4

இறையான்சேரி [இறைவான்சேரி] என்ற பெயரில் முறையே கீழ்வேளூருக்கு அருகிலும், சிவகங்கை மாவட்டதில் தேவகோட்டைக்கு அருகிலும், தஞ்சை மாவட்டத்திலும், காஞ்சிக்கு அருகிலும் ஊர்களுண்டு என்பர்.

32. இளையான்குடி - iLaiyAnkudi சு 7-39-1

அறுபத்து மூவருள் ஒருவராகிய இளையான்குடி மாறனார் திருப்பதி. இளையான்குடி மாறனார் வரலாற்றுடன் தொடர்புடைய இவ்வூர், தஞ்சை மாவட் டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இப்பெயருடன் வழங்குகிறது.

33. ஈசனூர் - IcanUr சு 7-31-8

பாடல்பெற்றத் தலமான திருவாய்மூருக்கு அருகில் ஈசனூர் உள்ளது.

34. உண்ணீர் - uNNIr அ 6-7-7

'உண்ணீரார் ஏடகமும்' என்புழி ஏடகத்திற்கு அடைமொழியாய் வந்தது தனித்ததோர் தலமன்று.

35. உதயமலை - udhayamalai அ 6-71-9

ஞாயிறு தோன்றும் மலை இறைவன் எழுந்தருளும் திருத்தலமாகக் குறிக்கப் பெற்றது.

36. உருத்திரகோடி - uruthirakODi அ 6-70-8

உருத்திரகோடி, கோடியுருத்திரர் பூசை செய்த தலம். காஞ்சிபுரத்திலும் திருக்கழுக் குன்றத்திலும் உள்ளதென்பர்.

37. ஊற்றத்தூர் - URRaththUr அ 6-70-10, 6-71-4

திருச்சிராப்பள்ளி - சென்னை தேசியநெடுஞ் சாலையில் பாடாலூரிலிருந்து 'புள்ளம்பாடி' சாலையில் 5 கி.மீ.ல் ஊற்றத்தூர் உள்ளது.

38. எங்களூர் - eN^gaLUr சு 7-31-6

அடியார்களாகிய எங்களுக்குரிமையுடைய ஊர் என இதனை அடைமொழியாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு.

39. எச்சிலிளமர் - ecciliLamar அ 6-70-4

"எச்சில்" என்பதும் "இளமர்" என்பதும் வெவ்வேறு ஊர்களாகும்.

40. எழுமூர் - ezhumUr அ 6-70-5

இப்பொழுது சென்னையின் ஒரு பகுதியாக இருக்கும் எழும்பூரே எழுமூர் ஆகும். [பிற்காலத்து அயலார் ஆட்சியினால் எழுமூரின் பழைய கோயில் சிதைவுற்று மறைந்துவிட்டதாகவும் கூறுவர்.]

41. ஏகம்பத்து - eAkampathu அ 6-70-4

திருவேகம்பத்து பாடல் பெற்றத் தலங்களான திருக்கானப்பேருக்கும், திருவாடானைக்கும் மத்தியில் உள்ளது. (இது காஞ்சியிலுள்ள திருவேகம்பமாகவும் இருக்கலாம்.)

42. ஏமகூடமலை - EmakUTamalai அ 6-7-8, 6-71-9 -
43. ஏமநல்லூர் - Eman^allUr அ 6-70-4

திருப்பனந்தாளிலிருந்து 5 கி. மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.

44. ஏமப்பேறூர் - EmappErUr அ 6-70-3

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் 8 கி. மீ. தொலைவில் ஏமப்பேறூர் உள்ளது. தற்போது இது திருநெய்ப்பேறு என்று வழங்குகிறது.

45. ஏயீச்சுரம் - EyIccuram அ 6-7-8 -
46. ஏர் - Eaar அ 6-51-6, 6-70-3

ஏர் என்னும் இத்தலம் சுவாமி மலைக்கு அருகில் "ஏரகரம்" என்னும் பெயருடன் விளங்குகிறது.

47. ஏழூர் - EzUr அ 6-70-5

நாமக்கல் - சேலம் சாலையில் தத்தாத்திரி புரம், அகரம் ஆகிய ஊர்களுக்கு அருகில் ஏழூர் (ஏளூர்) உள்ளது.

48. ஏறனூர் - ERanUr சு 7-31-9

கேரளத்தில், எர்ணாகுளம் - கோட்டயம் பாதையில் ஏறனூர் (ஏற்றமனூர்) உள்ளது. இது தற்போது எட்டுமானூர் என்று வழங்குகிறது.
ஏறனூர் என்பதை, - ஏற்றினை (இடபத்தை) ஊர்தியாகவுடைய இறைவன் எழுந்தருளிய ஊர் என அடைமொழியாகவும் கொள்ளலாம் என்றும் சொல்வர்.

49. ஒரேடகம் - orEtakam அ 6-7-10

ஒப்பற்ற ஏடகம், பாடல் பெற்றதலம். இனி உரோடகம் என்பதன் திரிபாகக்கொண்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊராகக் கொள்ளவும் இடமுண்டு. உரோடகம் எனக் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது.

'உரோடகத்துக் கந்தரத்தனார்' என்ற சங்கப் புலவர் இவ்வூரினரேயாதல் வேண்டும். இவ்வூர்க்கோயிலில் ஆதித்தன் காலத்துக் கல்வெட்டும், கங்கைகொண்ட சோழன் கல்வெட்டும் உள்ளன.

50. கச்சிப்பலதளி - kaccippalathaLi அ 6-70-4

காஞ்சி நகரத்திலுள்ள திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்காமக்கோட்டம், கச்சிநெறிக் காரைக்காடு முதலிய பல திருக்கோயில்களையும் குறிக்கும்.

51. கச்சிமயானம் - kaccimayAnam அ 6-97-10

காஞ்சிபுரத்தில் திருவேகம்பம் கோயிலுக் குள் கொடி நிலையின் அருகே அமைந்த மேற்குப் பார்த்த சந்நிதியே கச்சிமயானம் ஆகும்.

52. கச்சையூர் - kaccaiyUr சு 7-31-4 -
53. கஞ்சாறு - kanjARu அ 6-70-8

இராஜேந்திர சிங்க வளநாட்டுக் காஞ்சாறநகர் ஆகும்; தற்போது ஆனதாண்டவபுரம் என்று வழங்குகிறது. மானக்கஞ்சாற நாயனாரின் அவதார தலம்.

54. கடங்களூர் - kadangaLUr சு 7-31-3 -
55. கடம்பை இளங்கோயில் - kadampai iLangkOil அ 6-70-5

இஃது பாடல் பெற்ற தலமான திருக்கடம்பூர் திருக்கரக் கோயிலின் "முற்றத்தில் அமைந்துள்ள பாலாலயம்" என்றும்; திருக்கடம்பூரிலிருந்து கிழக்கே 2 கி. மீட்டர் தொலைவில் உள்ள கடம்பூர் இளங்கோயில் (கீழக்கடம்பூர்) என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

56. கடையக்குடி - kaDaiyakkuDi அ 6-71-3

அம்பாசமுத்திரத்திலிருந்து வடக்கே 22 கி. மீ. தொலைவில் கடையக்குடி உள்ளது.

57. கண்ணை (செங்கம்) - kaNNai அ 6-70-6

கண்ணை திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தலமாகும். தற்போது செங்கம் என்று வழங்குகிறது. இது செங்கண்மா என்பதன் மரூஉ ஆகும்.

58. கந்தமாதனமலை - kanDamAdhanamalai அ 6-71-9

திருச்செந்தூர் கோயிலுக்குள் (கோயிலை) ஒட்டினாற்போல் வடபால் கந்தமாதனமலை உள்ளது என்பர்.

59. கரபுரம் - karapuram அ 6-7-7

கரபுரம் என்ற இத்தலம் தற்போது திருப்பாற்கடல் என்ற பெயரில் உள்ளது. 'திருப்பாற்கடல் திருக்கரமுடைய நாயனார்' என்பது கல்வெட்டு செய்தியாகும்.

60. கருகற்குரல் - karukaRkural சு 7-47-5

கருகல் என்பதே ஊரின் பெயர். கதிரென தோன்றிய இறைவன் 'குரலாய்' என அழைக்கப்பட்டார்.

61. கருந்திட்டைக்குடி - karundthiTTaikkudi அ 6-71-3

தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் கருந்திட்டைக்குடி உள்ளது; தற்போது 'கரந்தை' என்று வழங்குகிறது.

62. கருப்பூர் - karuppUr சு 7-98-3

கும்பகோணத்தை அடுத்து கருப்பூர் உள்ளது. தற்போது கொரநாட்டுக் கருப்பூர் என்று வழங்குகிறது.

63. கருமாரி - karumAri அ 6-7-11

'கானார் மயிலார் கருமாரி' என்பதிலிருந்து இவ்வூரானது சோலைகளால் சூழப்பெற்ற தெனப் புலனாகிறது.

64. கழுநீர்க்குன்றம் - kazhunIrkkunRam அ 6-13-4

கழுநீர்க்குன்றம் திருத்தணிகை மலையில் உள்ளது.

65. கழுமாரம் - kazhumAram சு

கழுமாரம், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள தலமாகும்.

66. களந்தை - kaLandhai சு 7-39-6

கூற்றுவ நாயனார் அவதரித்த திருத்தலம். களப்பாள் என்பது மருவி களந்தை என்றாயிற்று. 'அருமொழிதேவ வளநாட்டுக் களப்பாள்' என்பது கல்வெட்டுக் குறிப் பாகும்.

67. காட்டூர் - kAttUr ச 2-39-7; சு 7-47-1

திருவாரூர், மதுராந்தகம், பந்தணைநல்லூர் ஆகிய ஊர்களுக்கு அருகிலும் இதே பெயருடன் ஊர்கள் உள்ளன. இருப்பினும் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரே வைப்புத் தலமாக கொள்ளப்படுகிறது.

68. காமரசவல்லி - kAmarasavalli

கீழைப்பழுவூரிலிருந்து 20 கி. மீட்ட்ரில் கொள்ளிடக் கரையில் இத்தலம் உள்ளது.

69. காம்பீலி - kAmpIli அ 6-70-2

கர்நாடக மாநிலம் - பெல்லாரி மாவட்டத் தில் காம்பீலி என்னும் இத்தலம் உள்ளது.

70. காரிக்கரை - kArikkarai சு 7-31-3

ஆந்திர மாநிலம் - சித்தூரில், நாகலாபுரத்தி லிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது காரிக்கரை. தற்போது ராமகிரி என்று வழங்குகிறது.

71. காவம் - kAvam சு 7-31-4 -
72. காளிங்கம் - kALingam அ 6-7-5

இத்தலம் அப்பர் பெருமானின் திருவாக் கில் 'கழுநீர் மதுவிரியும் காளிங்கம்' எனச் சிறப்பிக்கப்படுகிறது.

73. கிணார் - kiNAr

கிணார், மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள தலமாகும்.

74. கிழையம் - kizhaiyam சு 7-12-5 -
75. கிள்ளிகுடி - kiLLikudi சு 7-12-7

கிள்ளிக்குடி கீழ் வேளூரையடுத்துள்ளது. தற்போது இத்தலம் கிள்ளுக்குடி என்று வழங்குகிறது.

76. கீழையில் - kIzhaiyil சு 7-12-7

திருவாய்மூருக்கு வடகிழக்கே ஐந்து கி. மீட்டரில் கீழையில் உள்ளது. தற்போது கீழையூர் என்று வழங்குகிறது.

77. கீழைவழி - kIzhaivazhi சு 7-12-5 -
78. குக்குடேச்சுரம் - kukkudEchuram அ 6-71-8

ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம், புங்கனூரில் குக்குடேச்சுரம் என்னும் தலம் உள்ளது. இத்தலத்தை 'திருக்கோழீச் சுரம்' என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள் ளது.

79. குகையூர் - kukaiyUr

இத்தலம் கள்ளக்குறிச்சியிலிருந்து 27 கி. மீ தொலைவில் உள்ளது.

80. குணவாயில் - guNavAyil ச 2-39-7; அ 6-71-7

இது சேர நாட்டுத் தலமாகும். கேரளத்தில் கொடுங்கோளூருக்கு அருகில் குணவாயில் உள்ளது.

81. குண்டையூர் - kunDaiyUr சு 7-20-1

குண்டையூர் பாடல் பெற்றத் தலமான திருக்கோளிலியை அடுத்துள்ளது.

82. குத்தங்குடி - kuthangudi ச 2-39-10

குத்தங்குடி தேரழுந்தூருக்கு தெற்கே 5 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது "கொத்தங்குடி" என்று வழங்குகிறது.

83. குமரி - kumari அ 6-70-9

இத்தலம் கன்னியாகுமரியாகும்.

84. குமரிகொங்கு - kumarikongu அ 6-70-9

குமரி கொங்கு நாமக்கல்லிற்கு அருகில் உள்ள ஊராகும்; தற்போது மோகனூர் என்று வழங்குகிறது. (குமரி கொங்கு என்பதை "குமரி", "கொங்கு" என இரு தலமாகக் கொண்டு, குமரி என்பது கன்னியாகுமரி என்றும், கொங்கு என்பது ஒரு நாட்டின் பெயர் என்றும் கொல்லலாம் என்றொரு கருத்துள்ளது.)

85. குயிலாலந்துறை - kuyilAlanDuRai அ 6-71-11

சிலப்பதிகார காப்பியத்தில் குறிக்கப்படும் "குயிலாலுவம்" என்ற வடநாட்டுத் தலமாக இருத்தல் கூடும்.

86. குரக்குத்தளி - kurakkuthaLi சு 7-47-2

திருப்பூர் - ஊத்துக்குளி பாதையில் 8 கி. மீ. தொலைவில் குரக்குத்தளி உள்ளது. இந்த தலம் தற்போது (சர்க்கார்) பெரியபாளை யம் என்று வழங்குகிறது.

87. குருக்கேத்திரம் - kurukkEthiram சு 7-78-6

குருக்ஷேத்திரமே குருக்கேத்திரம் எனத் திரிந்து வழங்குகிறது.

88. குருந்தங்குடி - kurundhangudi ச 2-39-10 -
89. குன்றியூர் - kunRiyUr ச 2-39-1; அ 6-70-5

குன்றியூர் திருவாரூருக்கு மேற்கே 9 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்போது குன்னி யூர் என்று வழங்குகிறது.

90. குன்றையூர் - kunRaiyUr சு 7-39-1

திருச்செங்குன்றூர் மருவி குன்றையூர் எனவாயிற்று. விறன்மிண்ட நாயனாரின் அவதார பதியாகும். இது மலைநாட்டு தலமாகும்.

91. கூந்தலூர் - kUndalUr அ 6-70-9

பாடல்பெற்ற தலமான பேணுபெருந் துறைக்கு அருகில் கூந்தலூர் உள்ளது.

92. கூரூர் - kUrUr ச 2-39-1

'திருநறையூர் நாட்டுக் கூரூர்' என்பது கல்வெட்டுச் செய்தி.

93. கூழையூர் - kUzaiyUr அ 6-70-9

தேரழுந்தூரிலிருந்து மூன்று கி. மீட்டர் தொலைவில் கூழையூர் உள்ளது.

94. கூறனூர் - kURanUr சு 7-32-9

திருமாலை ஒரு பாகத்தே கொண்டமை யால், சிவபெருமான் 'திருமாலோன் கூறன்' எனக் குறிக்கப்படுகிறார்.

95. கைம்மை - kaimmai சு 7-12-5 -
96. கொங்கணம் - kongaNam அ 6-70-5

கொண்கானம் என்னும் மலையே; மருவி யுள்ளது.

97. கொண்டல் - kondal அ 6-51-9; சு 7-12-2

இது கொண்டல் நாட்டுத் தலையூராகும்; சீர்காழியிலிருந்து மேற்றிசையில் 4 கி. மீட்டர் தொலைவில் கொண்டல் உள்ளது.

98. கொல்லிமலை / கொல்லியறைப்பள்ளி - kollimalai அ 5-34-1

"அறைப்பள்ளி" நாமக்கல்லிலுருந்து 52 கி. மீ. தொலைவில், மலைமேல் உள்ளது. தற்போது கொல்லிமலை என்று வழங்குகிறது.

99. கொழுநல் - kozhunal சு 7-47-1 -
100. கோட்டுக்கா - kOttukkA அ 6-7-5

"கொழுநீர் புடை சுழிக்கும் கோட்டுக்கா" என்பார் அப்பர் பெருமான்.

101. கோட்டுக்காடு - kOttukkADu அ 6-70-2

மேலே குறிப்பிட்ட "கோட்டுக்கா"வும், கோட்டுக்காடும் ஒரே தலமா? அல்லது வேறுவேறா? என்பது சரிவரப் புலப்பட வில்லை.

102. கோத்திட்டை - kOthittai அ 6-70-3, 6-71-2; சு 7-3-1

"கோத்திட்டைக்குடி வீரட்டானம்" என்கிறார் நாவுக்கரசர்.

102. கோவந்த புத்தூர் - kO vantha puththUr அ 6-71-3

கொள்ளிடக்கரை கோவந்தபுத்தூர்.

103. சடைமுடி - sadaimudi அ 6-70-3

கல்லணைக்கு அண்மையில் சடைமுடி என்னும் இத்தலம் உள்ளது. தற்போது "கோவிலடி" என வழங்குகிறது.

104. சாலைக்குடி - sAlaikkudi அ 6-70-3 -
105. சித்தவடம் - siddhavadam அ 4-2-3

திருவதிகையிலுள்ள இச்சித்தவடமடத்தில் தான், சுந்தரர் துயில் கொல்லுங்கால் அவர் தலையில் இறைவனார் திருவடியை சூட்டினார்.

106. சிவப்பள்ளி - sivappaLLi அ 6-71-1

சிவப்பள்ளி என்பது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பொன்னார் கோயிலின் ஒரு பகுதியாகும். தற்போது திருச்செம் பள்ளி என்று வழங்குகிறது.

107. சிறப்பள்ளி - siRappaLLi ச 2-39-4 -
108. சூலமங்கை - sUlamangai அ 6-70-10

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டைக்கு அருகில் சூலமங்கை உள்ளது. தற்போது சூலமங்கலம் என்று வழங்குகிறது.

109. செங்குன்றூர் - sengunRUr அ 6-70-5

செங்குன்றூர் என்னும் இத்தலமே குன்றையூர் என மருவி விளங்கியது. விறன்மிண்ட நாயனாரின் அவதார தலம். இது மலைநாட்டு பதியாகும்.

110. செந்தில் - senthil அ 6-23-4

செந்தில் என்பது திருச்செந்தூராகும்.

111. செம்பங்குடி - sempangudi அ 6-7-3

சீர்காழிக்கு வடகிழக்கே மூன்று கி. மீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது.

112. சேற்றூர் - sERRUr அ 6-71-4

-

113. சையமலை - saiyamalai அ 6-71-10
-
114. சோமேசம் - sOmEsam அ 6-70-10

இது சோமநாதசுவாமி கோயில், குடந்தை யாகும். மேலும், இஃது ஸ்ரீ பெரும்புதூருக்கு கிழக்கே 15 கி. மீட்டர் தொலவில் உள்ள சோமங்கலமாகவும் இருக்கலாம்.

115. ஞாழல்வாயில் - gnAzalvAyil அ 6-71-7
-
116. ஞாழற்கோயில் - gnAzaRkOyil அ 6-71-5
-
117. தகடூர் - thakadUr சு 7-12-1

தகடூர் என்பது தற்போதைய தருமபுரி என்றும்; வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள "தகட்டூர்" என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

118. தகட்டூர் - thakattUr சு 7-12-1

தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

119. தக்களூர் - thakkaLUr அ 6-2-1, 6-70-3; சு 7-12-1

இத்தலம் திருநள்ளாற்றிற்க்கு அருகில் உள்ளது.

120. தங்களூர் - thangaLUr சு 7-31-6 -
121. தஞ்சாக்கை - thanjakkai சு 7-12-9

தஞ்சாக்கை பாண்டிநாட்டுத் தலம்; திருப்புவனத்திற்கு அருகில் உள்ளது. தற்போது சொல் வழக்கில் தஞ்சாக்கூர் என்று உள்ளது.

122. தஞ்சை - thanjai அ 6-70-8; சு 7-12-9

இது மருகல் நாட்டுத் தஞ்சையாகும். தற்போது கீழைத் தஞ்சை என வழக்கில் உள்ளது.

123. தஞ்சை தளிக்குளம்- thanjai thaLikkuLam அ 6-51-8, 6-71-10

"தஞ்சைத்தளிக்குளம்" என்பது தஞ்சை பெருவுடையாரின் முந்தைய நிலை. தஞ்சை சிவகங்கை பூங்காவினுள் உள்ளது.

124. தண்டங்குறை - thaNtankurai சு 7-12-2

தண்டங்குறை தற்போது தண்டங்கோரை என்று வழங்குகிறது. தஞ்சாவூர் - ஐயம்பேட்டையை அடுத்துள்ளது.

125. தண்டந்தோட்டம் - thaNtandthOttam சு 7-12-2

திருநாகேச்சுவரத்திலிருந்து நான்கு கி. மீட்டர் தொலைவில் தண்டந்தோட்டம் உள்ளது.

126. தவத்துறை - thavathuRai அ 6-71-11

இக்காலத்தே லால்குடி என்று வழங்கு கிறது. இது சப்த ரிஷிகள் வழிபட்ட தலமாதலின் 'பண்டெழுவர் தவத்துறை' என்று சிறப்பிப்பார் அப்பரடிகள்.

127. தவப்பள்ளி - thavappaLLi அ 6-71-1 -
128. தளிக்குளம் - thaLikkuLam அ 6-71-10

திருத்துறைப் பூண்டி - வேதாரண்யம் சாலையில் "ஆயக்காரன்புலம்" என்னும் ஊருக்கு அருகில் தளிக்குளம் உள்ளது.

129. தளிச்சாத்தங்குடி - thaLicchAthangudi அ 6-25-10

திருவாரூரிலிருந்து 7வது கி. மீட்டரில் தளிச்சாத்தங்குடி உள்ளது. தற்போது வடகண்டம் என்று வழங்குகிறது.

130. தாழையூர் - thAzhaiyUr சு 7-12-1 -
131. திங்களூர் - thingaLUr அ 6-25-3; சு 7-31-6

திருவையாறு - கும்பகோணம் சாலையில் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் உள்ளது. அப்பூதியடிகள் அவதரித்தருளிய பெரும்பதி.

132. திண்டீச்சரம் - thiNtIccharam அ 6-7-8, 6-70-9

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திண்டீச்சரம் உள்ளது. இன்று திண்டிவனம் என்று வழங்குகிறது.

133. திரிபுராந்தகம் - thiripurandagam அ 6-7-5

ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்திற்கு அருகே சிம்மாசலம் என்னும் தலத்தில் மலைமீது திரிபுராந்தகம் என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது.

விஜயவாடா - ஸ்ரீ சைலம் பாதையில் திரிபுராந்தகம் என்று ஓர் ஊர் உள்ளது; இவ்வூரில் இதே பெயரில் பெரிய சிவாலயமும் உள்ளது.

மேலும், தமிழகத்தில் (திருநெல்வேலி) - பாளையங்கோட்டையிலும் திரிபுராந்தகம் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது சிந்திக்கத்தக்கது.

134. திருக்குளம் - thirukkuLam அ 6-71-10 -
135. திருச்சிற்றம்பலம் - thirucchiRRambalam சு 7-12-4

பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி. மீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் உள்ளது.

136. திருத்தலையூர் - thiruthalaiyUr

துறையூருக்கு அருகில் இத்தலம் உள்ளது.

137. திருப்புலிவனம் - thiruppulivanam

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமே ரூருக்கு அருகிலுள்ள தலமாகும்.

138. திருமலை - thirumalai சு 7-12-7

புதுவை மாநிலத்தில் காரைக்காலை அடுத்துள்ளது திருமலை. தற்போது திரு மலைராயன்பட்டினம் என்று வழங்குகிறது.

139. திருவண்குடி - thiruvaNkudi ச 2-39-10 -
140. திருவாதிரையான்பட்டினம் - thiruvAdhiraiyAnpattinam சு 7-31-6

இது பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள கடற்கரையோர தலமாகும். தற்போது அதிராம்பட்டினம் என்று வழங்குகிறது.

141. திருவாமூர் - thiruvAmUr

திருவாமூர் நாவுக்கரசு பெருமான் திருவவதாரஞ் செய்தருளிய திருப்பதி. பண்ருட்டிக்கு அருகில் உள்ளது.

142. திருவேட்டி - thiruvEtty அ 6-7-7

திருவேட்டி என்னும் இத்தலம், சென்னை யில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள து.

143. துடையூர் - thudaiyUr அ 6-71-4

பாடல் பெற்றத் தலமான திருப்பாச்சிலாச்சி ராமம் (திருவாசி) என்னும் தலத்திற்கு அருகில் துடையூர் (தொடையூர்) உள்ளது.

144. துவையூர் - thuvaiyUr அ 6-71-4 -
145. தெள்ளாறு - theLLARu அ 6-71-10

வந்தவாசி - திண்டிவனம் பேருந்து சாலை யில் தெள்ளாறு உள்ளது.

146. தென்களக்குடி - thenkaLakkudi அ 6-71-3

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரிக்கு அருகில் தென்களக்குடி உள்ளது. பாண்டிய நாட்டுத் தலமாகும்.

147. தென்கோடி - thenkOdi ச 2-39-1

திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள பஞ்சநதிக்குளம் என்னும் பகுதியில் இத்தலம் உள்ளது.

(தனுக்கோடியா அல்லது கோடி குழகரா என்பது சரிவர தெரிவில்லை என்ற கருத்தும் உள்ளது.)

148. தென்பனையூர் - thenpanaiyUr சு 7-12-8

-

149. தென்னூர் - thennUr சு 7-12-6 -
150. தேங்கூர் - thEngUr சு 7-12-4, 7-47-6 -
151. தேசனூர் - thEsanUr சு 7-31-8 -
152. தேரூர் - thErUr அ 6-25-3 -
153. தேவனூர் - thEvanUr சு 7-12-6

செயங்கொண்ட சோழமண்டலத்து உத்தம சோழ வளநாட்டுத் தேவனூர் திருநாகேசுர முடைய மகாதேவர் என்பது கல்வெட்டு செய்தி.

154. தேவீச்சுரம் - thEvIcchuram அ 6-7-5

(1) நாகர்கோயில் திருவள்ளுவர் பேருந்து நிலைத்திற்கு அருகில் சிறிய தெருவில் உள்ள கோயிலே தேவீச்சுரம் என்பர்.

(2). நாகர்கோயிலிலிருந்து ஒரு கி. மீட்டர் தொலைவில் பழையாற்றின் கரையில் உள்ள கோயிலே தேவீச்சுரம் என்பாரும் உள்ளார்.

(3). திருநெல்வேலியிலிருந்து ஒழுங்கு சேரிக்கு செல்லும் வழியில் 55-வது மையிலில் தற்போதுள்ள வடிவீச்சுரமே தேவீச்சுரமாகும் என்றும் சொல்லப்படுகி றது.

(4). அப்பரடிகள் "தென்னார் தேவீச்சுரம்" என்பதால் இத்தலம் இதுவென தெரிய வில்லை என்றும் ஓர் கருத்துள்ளது.

155. தேறனூர் - thERanUr சு 7-31-9 -
156. தேனூர் - thEnUr ச 1-61-9; அ 6-41-9

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் தேனூர் உள்ளது. பாண்டி நாட்டிலும், கழுமல நாட்டிலும் தேனூர் என்ற பெயரில் தலங்கள் இருப்பதாக தெரிகிறது.

157. தோழூர் - thOzhUr அ 6-70-5, 6-71-4

நாமக்கல்லிலிருந்து 15 கி. மீ. தொலைவில் தோழூர் உள்ளது.
(இராசேந்திர சிங்கவள நாட்டு அண்டாட்டுக் கூற்றத்துத் தோழூர் என்பது கல்வெட்டு செய்தியாகும்.)

158. நங்களூர் - NangaLUr சு 7-31-6 -
159. நந்திகேச்சுரம் - NandikEcchuram அ 6-71-8

இது கன்னட நாட்டிலுள்ள நந்திகேச்சுரம் என்றும், சென்னை - கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள நந்திவரம் என்றும், பழையா றையிலுள்ள நந்திவனம் என்றும் கருத் துக்கள் உள்ளது.

160. நம்பனூர் - NampanUr சு 7-12-3

'நாலனூர் நரையேறுகந் தேறிய நம்பனூர்' என்பது சுந்தரர் வாக்கு.

161. நல்லக்குடி - Nallakkudi அ 6-71-1

மயிலாடுதுறை - நெடுமருதூர் சாலையில் நல்லக்குடி உள்ளது. தற்போது நல்லத்துக்குடி என வழங்குகிறது.

162. நல்லாத்தூர் - NallAthUr

கடலூர் மாவட்டம் - தீர்த்தனகிரியிலிருந்து வடக்கே 4 கி.மீ.ல் நல்லாத்தூர் உள்ளது.

163. நல்லாற்றூர் - NallARRUr அ 6-71-4

புதுச்சேரி - கண்டமங்கலத்திற்கு அருகில் உள்ளதென்றும்; கும்பகோணம் - கொல்லு மாங்குடிச் சாலையில் - நரசிங்கன்பேட் டைக்கருகே உள்ளதென்றும் கருத்துக்கள் உள்ளன.

164. திருநற்குன்றம் - thiruNaRkunRam ச 2-39-9

முசிறியிலிருந்து 15 கி. மீ. தொலைவில் திருநற்குன்றம் உள்ளது. இப்பதி தற்போது தின்னகோணம் என்று வழங்குகிறது.

165. நாகளேச்சுரம் - nAgaLEcchuram அ 6-71-8

நாகளேச்சுரம் என்பது சீகாழியிலுள்ளது. தற்போது இது "நாகேச்சரம் கோயில்" என்று வழங்குகிறது.

166. நாங்கூர் - nAngUr சு 7-1-24, 7-47-6

சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் "அண்ணன் பெருமாள் கோயில்" என்னும் ஊருக்கு அருகில் நாங்கூர் உள்ளது.

167. (பாவ) நாசனூர் - nAsanUr சு 7-31-8

"பாவ நாசனூர் நனிபள்ளி" என நனிபள்ளி க்கு அடைமொழியாகக் கொள்ளலாம்.

168. நாலனூர் - nAlanUr சு 7-12-3 -
169. நாலாறு - nAlARu அ 6-71-10

இத்தலத்தை அப்பரடிகள், 'நலந் திகழும் நாலாறு' என போற்றுகிறார்.

170. நாலூர் - nAlUr சு 7-31-6

நாலூர் குடவாயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இதையடுத்து 'நாலூர் மயானம்' என்னும் பாடல் பெற்றத் தலம் உள்ளது.

171. நாற்றானம் - nARRAnam சு 7-38-4 -
172. நியமநல்லூர் - NiyamanallUr அ 6-70-5 -
173. நியமம் - Niyamam அ 6-13-4

(மேலைத்) திருக்காட்டுப்பள்ளியை அடுத்து நியமம் உள்ளது. தற்போது நேமம் என்று வழங்குகிறது.

174. நிறைக்காடு - NiRaikkAdu சு 7-47-3 -
175. நிறையனூர் - NiRaiyanUr சு 7-31-5 -
176. நின்றவூர் - NinRavUr சு 7-39-11

மனக்கோயில் அமைத்து வழிபட்ட பூசலார் நாயனார் அவதரித்த பதி.

177. நீலமலை - NIlamalai அ 6-71-9 -
178. நெடுவாயில் - NeduvAyil ச 2-39-9; அ 6-71-7

நெடுவாயில் - மயிலாடுதுறை தாலுகா விலுள்ள ஓர் தலமாகும். தற்போது நெடுவாசல் என்று வழங்குகிறது.

179. நெய்தல்வாயில் - NeithalvAyil அ 6-71-7

நெய்தல்வாயில் திருவெண்காட்டிலிருந்து 3 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடலால் கொள்ளப்பட்டு, காவிரிப்பூம்பட்டி னத்தருகே எஞ்சியுள்ள ஊராகும்.

180. நெற்குன்றம் - NeRkunRam ச 2-39-9

இது திருநெற்குன்றம் என்றும் சொல்லப் படுகிறது.

181. பஞ்சாக்கை - panjAkkai அ 6-70-8

திருக்கடவூருக்கு அருகில் பஞ்சாகை உள்ளது.

182. பந்தையூர் - pandaiyUr சு 7-31-1 -
183. பரப்பள்ளி - parappaLLi அ 6-71-1

தாராபுரம் - காங்கேயத்தை அடுத்துள்ளது பரப்பள்ளி. தற்போது "பரஞ்சேர்வழி" என்று வழங்குகிறது.

184. பவ்வந்திரி - pavvanthiri அ 6-7-6

-

185. பழையாறு - pazhaiyAru அ 6-13-1

பழையாறு என்பது பழையாறையாகும். இத்தலம் பட்டீச்சரம் - மருதநல்லூருக்கு அருகில் உள்ளது.

186. பன்னூர் - pannUr சு 7-12-6

பன்னூர் திருத்தலையூரைக்கு அருகில் உள்ளது. தற்போது 'பண்ணூர்' என்று வழங்குகிறது.

187. பாங்கூர் - pAngUr சு 7-12-4 -
188. பாசனூர் - pAsanUr சு 7-31-8 -
189. பாட்டூர் - pAttUr சு 7-47-1 -
190. பாவநாசம் - pAvanAsam அ 6-7-6

இது பொதியின்மலை சாரலில் உள்ள பாபநாசம் ஆகும்.

191. பாற்குளம் - pARkuLam அ 6-13-1

அரிச்சந்திரம் - திருக்கோயிலுக்கு எதிர் புறத்தில் சற்று தொலைவில் சாலைக்கு மறுபுறத்தில் ஒரு குளம் உள்ளது; இஃது 'பாற்குளம்' என்று விளங்குகிறது. ஆனால் கோயில்கள் ஏதுமில்லை.

192. பிடவூர் - pidavUr அ 6-7-6, 6-70-2

சமயபுரத்தை அடுத்துள்ள சிறுகனூரி லிருந்து 4 கி. மீட்டர் தொலைவில் பிடவூர் உள்ளது.

193. பிரம்பில் - pirampil அ 6-70-6

மயிலாடுதுறை - பொறையாறு சாலையில், மங்கநல்லூரை அடுத்துள்ளது பிரம்பில். தற்போது பெரம்பூர் என்றுள்ளது.

194. பிறையனூர் - piRaiyanUr -
195. புதுக்குடி - pudukkudi அ 6-71-3

எரவாஞ்சேரிக்கு அருகில் புதுக்குடி உள்ளது. தற்போது "பதினெட்டு புதுக்குடி" என்று வழங்குகிறது.

196. புரிச்சந்திரம் - purichandiram அ 6-51-10 -
197. புரிசை நாட்டுப் புரிசை - purisai NAttup purisai சு 7-12-6

புரிசைநாட்டுபுரிசை என்ற இத்தலம், வந்தவாசிக்கும் செய்யாறுக்கும் மத்தியில் உள்ளதென்றும், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ளதென்றும் கருத்துக்கள் உள்ளன.

198. புலிவலம் - pulivalam அ 6-51-11, 6-70-11

திருவாரூருக்கு அருகாமையில் புலிவலம் உள்ளது.

199. புவனம் - puvanam அ 6-51-11

இஃது திரிபுவனம் என்றும் கொள்ளலாம். 'புவனநாதர்' என இறைவனைக் குறித்த பெயராகவும் கொள்ளலாம் என்ற கருத்து உள்ளது.

200. புற்குடி - puRkudi அ 6-71-3 -
201. பூங்கூர் - pUngUr சு 7-12-4 -
202. பூந்துறை - pUnduRai ச 3-92-8; அ 6-7-11

இது திருநெல்வேலியில் உள்ளது. தற்போது சிந்துபூந்துறை என்று வழங்கு கிறது.

203. பூழியூர் - pUziyUr ச 2-39-8

பூமி நாட்டின் தலைநகராக இருக்கலாம்.

204. பெருந்துறை - perunDuRai அ 6-70-2, 6-71-11

அறந்தாங்கிக்கு மிக அண்மையில் திருப் பெருந்துறை (ஆவுடையார்ச்கோயில்) உள் ளது.

205. பெருமூர் - perumUr அ 6-31-5

பெருமூர் என்பது எதுவென்று சரிவர தெரியவில்லை.

சேலத்திற்கு அருகில் பெரியூர் என்றொரு ஊர் உள்ளது; தற்போது உத்தமசோழ புரம் என்று வழங்குகிறது. இத்தலமும் வைப்புத் தலம் என்பர் ஆய்வாளர் சிலர்.

206. பேராவூர் - pEravUr அ 6-70-2, 6-71-4

திருவாவடுதுறையிலிருந்து 5 கி. மீட்டரில் பேராவூர் உள்ளது. கோயிற் பெயர் ஆதித் தீச்சரம் எனப்படுகிறது.

207. பேறனூர் - pEranUr அ 6-31-9 -
208. பொதியின்மலை - podhiyinmalai ச 1-50-10, 1-79-1; அ 6-70-8

இது பொதியின்மலை சாரலில் உள்ள பாவநாசம் ஆகும்.

209. பொய்கை நல்லூர் - poikai NallUr அ 6-70-11

இஃது அரக்கோணம் தாலூகாவில் உள்ள தலம் என்றும்; நாகப்பட்டினத்திற்கு அருகி லுள்ள தலம் என்றும் இருவேறு கருத்துக் கள் உள்ளன.

அறந்தாங்கிக்கும் பொய்கை நல்லூர் என்ற பெயர் இருந்ததாக தெரிகிறது.

('பொய்கை நாட்டுத் திருவையாறு' என் றொரு கல்வெட்டுச் செய்தி உள்ளதால், பொய்கை நல்லூர் என்பதை பொய்கை, நல்லூர் என இரு தலமாக கொள்ளலும் பொருந்தும்.)

210. பொய்கை - poikai அ 6-70-11

'பொய்கை நாட்டுத் திருவையாறு' எனக் கல்வெட்டுச் செய்தி உள்ளதால், (பொய்கை நல்லூர் என்பதை பொய்கை, நல்லூர் என இரு தலமாக கொள்ளலுதலும் பொருந் தும்.) 'பொய்கை' என்பது அந்நாட்டின் தலை நகராக இருந்திருக்க வேண்டும்.

211. பொருப்பள்ளி - poruppaLLi அ 6-71-1

'பொருப்பள்ளி வரைவில்லாப்புர மூன் றெய்து' என்பதனை பொருப்பு அள்ளி வரைவில்லாப் புரம்மூன்றெய்து எனப் பிரித்துப் பொருள் கொள்ளவும் இட முண்டு.

212. பொன்னூர் நாட்டுப் பொன்னூர் - ponnUr NAttup ponnUr சு 7-12-6

பொன்னூர் நாட்டுப் பொன்னூர் என்பது வந்தவாசிக்கு அருகிலுள்ள தலமாகும். தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது.

213. போற்றூர் - pORRUr ச 2-39-8

போற்றூர்டியார் வழிபாடொழியா' என்பது அடைமொழியாக இருக்கலாம்.

214. மகனூர் - makanUr அ ; சு

மகனூர் நாமக்கல்லிற்கு அருகிலுள்ளது.

215. மகாமேரு - mahAmEru அ 6-71-9

இஃது 'மாமேரு' மலையாகும்.

216. மகேந்திரமலை - mahEnthiramalai அ 6-71-9 -
217. மணற்கால் - maNaRkAl அ 6-25-10

பாடற் பெற்றத் தலமான பெருவேளூ ருக்கு அண்மையில் மணற்கால் உள்ளது.

218. மக்கீச்சரம் - makkIccharam அ 6-71-8

இது அரேபியா நாட்டிலுள்ள 'மக்கா நகர மாகும்.

219. மணிக்கோயில் - maNikkOyil அ 6-71-5

இது தனித்தலமன்று, கோயிலமைப்பினைக் குறித்த பெயர். திருவாரூர் கோயில் மணிக் கோயிலமைப்பை உடையது. சீர்காழி - பூம்புகார் சாலையில், திருவெண்காட்டை அடுத்து மணிக்கிராமம் என்றொரு ஊர் உள்ளது.

220. மணிமுத்தம் - maNimutham அ 6-7-6 -
221. மத்தங்குடி - mathangudi ச 2-39-10 -
222. மந்தாரம் - mandAram அ 6-70-6

மந்தாரம் மாயூரத்திற்கு அருகில் உள்ளது. தற்போதூ ஆத்தூர் என்றும், ஆற்றூர் என் றும் வழங்குகிறது.

223. மறையனூர் - maRaiyanUr சு 7-31-5 -
224. மாகாளம் - mAhALam அ 6-7-11, 6-51-7; சு 7-47-5

மாகாளம் கீழ்வேளூருக்கு (கீவளூர்) அருகில் உள்ளது. (இது உஞ்சேனை மாகா ளம், அம்பர் மாகாளம் ஆகியவற்றை குறிப் பனவாக இருக்கலாம் என்றும் சொல்வர்.)

225. மாகாளேச்சுரம் - mAhALEccuram அ 6-71-8 -
226. மாகுடி - mAkudi அ 6-71-3

சீகாழி - நாகப்பட்டினம் சாலையில் மாகுடி உள்ளது. தற்போது 'மாமாகுடி' என்று அழைக்கப்படுகிறது.

227. மாட்டூர் - mAttUr ச 2-39-7; சு 7-47-1

மாட்டூர் என்பது அவிநாசிக்கு அருகில் தற்போதுள்ள 'சேவூர்' என்றும், மாயூரத் திற்கு அருகில் தற்போதுள்ள 'சேவூர்' என்றும் கருத்துக்கள் உள்ளன.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், பாடல் பெற்றத் தலமான ஆக்கூருக்கு அருகிலும் மாட்டூர் என்றொறு ஊர் உள்ளது; இது தற்போது மாத்தூர் என்று வழங்குகிறது.

செஞ்சிக்கு அருகில் திருவிடையூர் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது, இது தற்போது மேல்சேவூர் என்று வழங்குகிறது; இத்தல மும் வைப்புத் தலம் என்பர் ஆய்வர் சிலர்.

228. மாதானம் - mAthAnam அ 6-70-8 -
229. மாணிகுடி - mANikuDi அ 6-71-3 -
230. மாநதி - mANadhi அ 6-7-4 -
231. மானிருபம் - mAnirupam அ 6-7-12 -
232. மாவூர் - mAvUr அ 6-7-12 -
233. மாறன்பாடி - mARanpAdi ச 2-39-3

விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது மாறன் பாடி. சம்பந்தர் குறிக்கும் 'பாடி நான்கும்' என்பதில் இத்தலமும் ஒன்று. தற்போது இறையூர் என்றும், எறையூர் என்றும் இத்தலம் வழங்குகிறது.

234. மிறைக்காடு - miRaikkAdu சு 7-47-3 -
235. மிழலை நாட்டு மிழலை - mizhalaiNAttu mizhalai சு 7-12-5

புதுக்கோட்டை - காரைக்குடி பேருந்து வழி தடத்தில் பேறையூருக்கு அருகில் மிழலை நாட்டுமிழலை என்னும் இத்தலம் உள்ளது. தற்போது இது "தேவமலை" என்று வழங்கு கிறது.
மிழலை நாட்டு மிழலை என்பது தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள ஊர் என்றும் சொல்லப்படுகிறது.

236. முதல்வனூர் - muthalvanUr சு 7-12-3 -
237. முந்தையூர் - munDaiyUr சு 7-31-1 -
238. மூவலூர் - mUvalUr அ 5-65-8

இத்தலம் மாயூரத்திற்கு அருகிலுள்ளது.

239. மூலனூர் - mUlanUr சு 7-12-3

தாராபுரத்திலிருந்து 16 கி. மீட்டர் தொலை வில் மூலனூர் உள்ளது.

240. முழையூர் - muzhaiyUr அ 6-41-9, 6-70-1

பழையாறை வடதளி, பட்டீச்சுரம் ஆகிய இரு பாடல் பெற்ற தலங்களுக்கு அருகில் முழையூர் உள்ளது.

241. வடகஞ்சனூர் - vaDakanjsanUr சு 7-12-8

விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் வடகஞ்சனூர் உள்ளது.

242. வடபேறூர் - vadapERUr சு 7-31-4 -
243. வரந்தை - varanDai ச 1-61-3 -
244. வரிஞ்சை - varignsai சு 7-39-7

இஃது சத்தி நாயனாரின் அவதாரத் தல மாகும்.

245. வழுவூர் - vazhuvUr அ 6-70-1, 6-71-2

மாயூரத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் திருவழுவூர் வீரட்டனமாகிய இத்தலம் உள்ளது.

246. வளவி - vaLavi அ 6-13-1 -
247. வளைகுளம் - vaLaikuLam அ 6-50-8, 6-71-10

தற்போது 'வளர்புரம்' என்ற பெயருடன் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள தல மாகும்.

248. வாதவூர் - vAthavUr ச 2-39-7

இஃது பாண்டி நாட்டுத் தலமாகும்; 'திரு வாலவாய்' (மதுரை)க்கு அருகில் வாதவூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்தருளிய தலம்.

249. வாரணாசி - vAraNasi ச 2-39-7; அ 6-70-6

இது வடநாட்டிலுள்ள 'காசி'யாகும்.

250. விடங்களூர் - viDangaLur சு 7-31-3 -
251. வடைவாய்க்குடி - viDaivAikkuDi அ 6-71-3

வடைவாய்க்குடி, பாடல் பெற்றத் தலமான திருமருகலுக்கு அண்மையில் உள்ளது.

252. வீந்தமாமலை - vInDamAmalai அ 6-71-9 -
253. விவீச்சுரம் - vivIcchuram அ 6-70-8

விவீச்சுரம் என்பது ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் திராக்ஷாராமம் என்ற ஊரிலுள்ள ஆலயமென்றும், வீமீச்சுரம் என்பதே 'விவீசுரம்' என்று மருவி இருத்தல் வேண்டும் என்றும் கூறுவர்.

254. விராடபுரம் - virAtapuram அ 6-70-6 -
255. விளத்தூர் - viLathUr சு 7-12-8 -
256. விளத்தொட்டி - viLathotti அ 6-70-6

பந்தணை நல்லூருக்கு வடக்கே 4 கி. மீ. தூரத்தில் விளத்தொட்டி உள்ளது.

257. வெகுளீச்சுரம் - vekuLIcchuram அ 6-7-11 -
258. வெள்ளாறு - veLLARu சு 7-38-4 -
259. வெற்றியூர் - veRRiyUr ச 2-39-6; அ 6-70-8; சு 7-12-3

இது பாண்டிய நாட்டுத் தலம்; பாடல் பெற்ற தலமான திருவாடானைக்கு அரு கில் (திரு)வெற்றியூர் உள்ளது.

260. வேங்கூர் - vEngUr அ 6-70-7; சு 7-47-6 -
261. வேதம் - vEtham அ 6-71-9 -
262. வேதீச்சுரம் - vEthIcchuram அ 6-70-8 -
263. வேலனூர் - vElanUr சு 7-12-3 -
264. வேளார்நாட்டு வேளூர் - vELArnAttu vELUr சு 7-12-8 -
  1. aN^gaNam
  2. AmAvUr
  3. iRaivanUr
  4. kaDaN^gaLUr
  5. karakkOyil
  6. kaLappAz
  7. kaLarkArai
  8. kATTUr
  9. kArUr
  10. kARai
  11. kARRUr
  12. kIccuram
  13. kuzaiyUr
  14. kUDal
  15. kURRUr
  16. koguDikkOyil
  17. koDuN^kOvalUr
  18. koDuN^kOLUr
  19. kOTIccuram
  20. kOvan^dhapuththUr
  21. ciththIccuram
  22. cirapuram
  23. cIkkAli
  24. curiyal
  25. cERRUr
  26. nyAzalkOyil
  27. thanychaiyezumUr
  28. thaNDalaiyAlaN^kAri
  29. thaniccAththaN^kuDi
  30. thAN^gUr
  31. dhEvankuDi
  32. n^eydhalkuDi
  33. paTTi
  34. pazaiyanUr
  35. pAdhALam
  36. pArUr
  37. puRavam
  38. puththUr
  39. puliyUr
  40. mAkONam
  41. muLaiyUr
  42. mUdhUr
  43. veNthuRai

Note:
The above list does not seem to be completely correct. For example cirapuram, puRavam, mANikkuDi, pazaiyanUr etc. seem to be the pADal peRRa thalaN^gaL.



Vaipputh thalangaL - thiruvasagam, thirukkovaiyar

(Please note that this list is incomplete)
8th thirumuRai vaipputh thalaN^gaL
  1. ambar
  2. Idaimarudhu
  3. Ingoymalai
  4. Ekambam
  5. kadambai
  6. kazukkunRu
  7. kazi
  8. kuRRAlam
  9. kUDal
  10. kodunkunru
  11. kayilai
  12. chivanagar
  13. chuziyal
  14. thiruppanaiyUr
  15. parankunRu
  16. puvaNam
  17. perunthuRai
  18. podhiyil-malayam
  19. muval
  20. vanchiyam
  21. venkadu




No comments:

Post a Comment